மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்திருந்த நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து வந்து காரின் தீயை அணைத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ளவர்கள் தீயணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டனர்.
இதனால், அருகில் உள்ள கார்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித சேதம் இல்லாமல் தீ அணைக்கப்பட்டது. கார், திடீர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை அருகே கார் தீப்பற்றியது
