கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவையில் மூவ் எக்ஸ் எனும் சர்வதேச அளவிலான மாநாடு மற்றும் அமர்வு நடைபெற்றது..
இதில் கோவை உட்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிசியோதெரபி துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பிசியோதெரபி சிகிச்சையில் நவீன தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்..

டெலிபிசியோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.இயன் முறை மருத்துவரான சந்தியா தலைமையில் நடைபெற்ற இதில்,புனர் வாழ்வு சிகிச்சை துறை, இயன் முறை மருத்துவம் மற்றும் ஸ்டார்ட் அப் துறை சார்ந்த நிபுணர்கள் ,சுந்தர்,குமரேஷ் பாபு,பிரதீபா,,ஸ்டஃபோர்டு மிக்காயில்,அஷ்மிதா நோரான்ஹா,ஸ்,காயத்ரி, நவீன் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்…
மாநாட்டின் ஒரு பகுதியாக டெலிபிசியோ’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இயன் முறை மருத்துவர் சந்தியா ஃபிசிவ்’ செயலி எனும் புதிய செயலியை அறிமுகம் செய்து பேசினார்..
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிசியோதெரபி சிகிச்சையை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறிப்பாக ஏ.ஐ.தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் லேப்டாப் உதவியுடன் நோயாளிகளின் உடல் இயக்கங்களை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான பிசியோதெரபி பயிற்சிகளை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

முதியவர்கள், தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்ல சிரமப்படுவோர், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர் பிசியோதெரபி தேவைப்படுவோர் மற்றும் பணிச்சுமை காரணமாக நேரடியாக சிகிச்சை மையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்…








