• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கிராமத்தின் குடிநீர் குழாயில் உடைப்பு..,

ByP.Thangapandi

Aug 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலந்தூர், சொக்கத்தேவன்பட்டி கிராமத்திற்கு வாலாந்தூர் கண்மாய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.,

இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வாலாந்தூர் கண்மாயில் நிரம்பி வருகிறது.,

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டாலும் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது., மேலும் குடிநீர் பற்றாக்குறை காலத்தில் குடிநீரை வீணடிக்கும் சம்பவம் கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.,