• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி

ByS.Navinsanjai

Mar 6, 2023

செம்மிபாளையம் பிரிவு அருகே அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பரிதாப பலி!!
உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை!!!
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 44.இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் ராமன் 15 என்று ஒரு மகனும் உள்ளனர். ராமன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று மாலை சிறுவன் ராமன் இருசக்கர வாகனத்தில் பல்லடத்தில் இருந்து கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செமிபாளையம் பிரிவருகே சென்று கொண்டிருந்தபோது கோவையில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ராமன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.ஈச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.