தமிழக எல்லை குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு மிளாமலை பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 26 வயது இளம் பெண்ணை, 12 வயது சிறுவனுக்கு கட்டன் சாயா (பால் இல்லாத டீ) எனச் சொல்லி மது கொடுத்து குடிக்க வைத்த சம்பவத்தில் பீருமேடு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று மதியம் பிரியங்காவின் வீட்டிற்குச் சென்ற சிறுவனுக்கு, வீட்டில் வைத்து கட்டன் சாயா என்று நம்பவைத்து சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார். போதையில் மயங்கி விழுந்த சிறுவன் நீண்ட நேரம் கழித்து உடல் சோர்வோடு வீடு திரும்பியதும், பெற்றோர் விசாரித்துள்ளனர்.
அப்போது பிரியங்கா டீ எனச் சொல்லி மது கொடுத்ததாக சிறுவன் கூறினான். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் பீருமேடு போலீசில் புகார் அளித்தனர். இதை அடுத்து பிரியங்காவை கைது செய்த பீர்மேடு போலீசார், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.