• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்கை டைவிங்கில் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி..!

Byவிஷா

Oct 6, 2023

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்று சொல்வார்கள். இந்த வாக்கியத்தை உண்மையாக்கியிருக்கிறார் 104 வயது மூதாட்டி ஒருவர் அவர் அப்படி என்ன சாதனை செய்தார் என்பதைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் சிகாகோவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தவர். தற்போது வயதானதால் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சாதனை படைத்தார். விமானத்திலிருந்து குதித்து 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து பாதுகாப்பாக தரையிறங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து அந்த மூதாட்டி “இதற்கு முன்பு 100 வயதில் ஸ்கை டைவ் செய்துள்ளேன். அப்போது பயம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் இப்போது பயமின்றி தாமாக குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மற்ற நாடுகளுக்கு சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன், ஸ்வீடனில் வசித்து வரும் 103 வயதான லின்னியா இங்கேகார்ட் லார்சன் 2022 மே மாதம் மிக வயதான ஸ்கைடைவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை 104 வயதான மூதாட்டி டோரதி தற்போது முறியடித்துள்ளார். டோரதி விரைவில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் 105 ஆவது வயது தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.