தமிழ்நாட்டின் காலை உணவுத்திட்டத்தைப் பின்பற்றி, தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டத்தை அம்மாநில முதல்வர் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி காலையிலும் உணவு அருந்தி பள்ளியில் பாடம் கற்பிக்கும் விதமாக தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கானா மாநில அரசு தமிழக அரசு செய்து வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவர உத்தரவிட்டார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகமாகிறது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். 3400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.