• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் வர்ஷா அபிஷேக விழா அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

ByA.Tamilselvan

Nov 5, 2022

கோவிலின் நிர்வாகத் தலைவர்களின் அழைப்பினை ஏற்று அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் வர்ஷா அபிஷேக விழா அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலமாகும். இந்நிலையில் விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் கோவில் வர்ஷா அபிஷேக விழா இன்று நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனாரின் அருளாசி பெற்றுச்செல்வார்கள். இந்நிகழ்ச்சியை ஆர்.சங்கரலிங்கம், வி.ஜெய்சங்கர், என்.குமரவேல் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
வர்ஷா அபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் நிர்வாகத் தலைவர்களின் அழைப்பினை ஏற்று விருதுநகர் அதிமுக நகர செயலாளர் முகமது நெய்னார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.