• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

* செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை ஆர்ப்பாட்டம்*

Byகுமார்

Oct 6, 2021

தமிழ்நாடு எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், 2015 ம் ஆண்டு மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் மூலம் ஒப்பந்த முறையில் பணிமயர்த்தப்பட்ட 7212 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் இருந்து நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.