• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கலவர பூமியாக மாறுகிறதா கொங்கு மண்டலம்

ByA.Tamilselvan

Oct 25, 2022

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலவர பகுதியாக கொங்கு மண்டலம் மாறி வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாநகரத்தின் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது கோவை உக்கடத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல்தான்.சிலிண்டர் வெடித்ததாக கூறி திசை திருப்புகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ மூடி மறைப்பதாக அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பாஜகவுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.