• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேவர் தங்ககவசம் யாருக்கு?கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ByA.Tamilselvan

Oct 26, 2022

தேவர் தங்க கவசம் யாருக்கு என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.தேவர் ஜெயந்தி விழா நெருங்குவதால், தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுவினர் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் வழங்கப்பட்டது.இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படுவது வழக்கம்.தற்போது அதிமுக இருபிரிவுகளாக பிளவுபட்டுள்ளது.இந்நிலையில் தேவர் குருபூஜையின் போது தங்க கவசத்தை தங்களிடம் தான் வழங்கவேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனிதனியாக மனு அளித்திருந்தனர். அதிமுக கட்சி விவகாரத்தில் தலையிடவிரும்பவில்லை என்று கூறிய ஐகோர்ட் வருவாய் அலுவலர் வங்கியிடம் இருந்து கவசத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.