• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திடீரென தீப்பற்றிய பயணிகள் ரயில்: ஒடிசாவில் பரபரப்பு

ByA.Tamilselvan

Oct 21, 2022

ஒடிசாவில் கடைசி ரயில் பெட்டியில் தீப்பற்றியதும் பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து தப்பித்தனர்.
ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் பயணிகள் ரெயில் இன்று தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரெயிலை நிறுத்த ஓட்டுனருக்கு உத்தரவிட்டனர். அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், ரெயிலுக்குள் இருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். பலரை ரெயில்வே அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.