• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

ByA.Tamilselvan

Oct 21, 2022

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காமல் ஆசிரியர்களாக பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க தமிழக கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சிறுபான்மை பள்ளிகளில் 1,156 ஆசிரியர்களும், சிறுபான்மை அல்லாதோர் பள்ளிகளில் 591 ஆசிரியர்களும் என மொத்தம் 1747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.