• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்..!

ByA.Tamilselvan

Oct 21, 2022

சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று, காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலர் ஒருவர் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.