• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயிலில் அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு அறை திறப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 19, 2026

மதுரை – தேனி நெடுஞ்சாலையில், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநதன் திறந்து வைத்தார்.

இதற்காக அங்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநதன், கண்காணிப்பு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் முத்தையா ,நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டியன் மற்றும் சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரம்யா ரோட்டரி கிளப் துணையாளர் நெல்லை பாலு ஜல்லிக்கட்டு ரோட்டரி சண்முகம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாலைப்போக்குவரத்து மற்றும் போதை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

தொடர்ந்து,நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழக பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிரவீன ஆறு சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் காட்சிகள் கண்காணிப்பு அறை மூலம் கண்காணிக்கப்படும் விதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், விபத்து போன்ற பேரிடர் காலங்களில் இந்தக் கண்காணிப்பு கேமரா செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது