• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாளை சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன் கார்கே

ByA.Tamilselvan

Oct 13, 2022

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர்,மல்லிகாரஜூன் கார்க்கே ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.இதனால் தற்போதைய நிலையில் சசி தரூர்- மல்லிகார்ஜூன கார்கே இடையே போட்டி நிலவுகிறது.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஏற்கனவே சசிதரூர் ஆதரவு திரட்டி சென்றுள்ளார். அவரை தொடர்ந்து கார்கே நாளை சென்னை வருகிறார்.அவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.