• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அக்.30ல் பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார்

ByA.Tamilselvan

Oct 11, 2022

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி முதன் முதலில் வர இருக்கிறார் என்பதால் அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாரதிய ஜனதா தலைவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.