• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை

ByA.Tamilselvan

Oct 11, 2022

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.