• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. புதிய அதிகாரி நியமனம்..

Byகாயத்ரி

Oct 6, 2022

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தீவிரமாக மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கோடநாடு வழக்கில் சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். கோடநாடு வழக்குகளை தனிப்படை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.