• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 92 பேர் பலி

ByA.Tamilselvan

Oct 3, 2022

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது. மாஷா அமினி இறந்த பிறகு போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது.
போராட்டம் நடத்தும் பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுவரை போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.