• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் இன்று கருட சேவை

ByA.Tamilselvan

Oct 1, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வருகிறார். ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்களுக்கு கருட சேவை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.