• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்!!!!

ByA.Tamilselvan

Sep 29, 2022

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் அனுப்பியுள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் கோவை மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகின்றது. தற்போது பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.