• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களுக்காக மெரினாவில் இணைய சேவை…

Byகாயத்ரி

Sep 26, 2022

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக சென்னை மெரினா கடற்கரை உள்ளது. எனவே மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.