• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது… வி.சி.க தலைவர் திருமாவளவன் மனு

Byகாயத்ரி

Sep 26, 2022

தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அணுவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமீபத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அன்று அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பபெற வேண்டுமென வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘’பாஜக விளம்பரத்திற்காக தங்கள் வீடுகளில் குண்டுகள் வீசி வரும் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால், மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு காந்தி ஜெயந்தி அன்று அனுமதி வழங்கக்கூடாது ‘’என்று தெரிவித்துள்ளார்.