• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்- பிரதமர் அறிவிப்பு

ByA.Tamilselvan

Sep 25, 2022

பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில்பேசும்போது…:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும் குப்பைகளும் பிரச்சனையாக உள்ளன. இந்தச் சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும். சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் வரும் 28ம் தேதி முக்கியமான நாளாகும். அன்று பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.