பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெற உள்ள தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மாநிலத்தில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மின்பற்றாக்குறையைச் சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மின்கொள்முதல் விவகாரத்தில் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.75 முதல் ரூ.6.35வரை கொள்முதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், பின்னர் 2021 முதல் 2026 வரை ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11.50 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக ஊழல் செய்திருப்பதாக கூறி அந்த ஒப்பந்தத்தை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் ரத்து செய்தார். அதற்கு உடனடியாக முறையாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் மின்பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது என்றார்.
சரியாக மின் கொள்முதல் செய்யாமல் பின்பற்றாக்குறை இருப்பது போல் செயற்கையாக உருவாக்கி இப்போது 37 ரூபாய் 50 பைசா ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35.50-க்கும், பின்னர் ரூ.41.50-க்கும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியது பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அதனை ரத்து செய்ததாகவும் தெரிவித்தனர். கடந்த ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரம் வாங்கியது தவறு ஊழல் என்றால், தற்போது 41.50 ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்வதால் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என மக்கள் அறிய வேண்டும்.மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

குற்றவாளியும் கண்டுபிடிக்க முடியவில்லை குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், அவர்களைப் பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
புழல் சிறையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட காட்சிகள் வெளியான நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளார். முதலமைச்சர் ஆய்வு செய்தது உண்மையான கண்காணிப்புக்காகவா அல்லது வேறு காரணத்திற்காகவா எனக் கேள்வி எழுப்பினார்.

தேனி சிறையிலிருந்தும் 17 பேர் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் இத்தகைய சம்பவங்கள் அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாகவும்.
செஞ்சியில் ஏழு வயது சிறுமி காணாமல் போய் ஒரு வாரமாகியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார்.
பட்டப்பகலில் சாலைகளில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசு ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதைப் போல முதலமைச்சரும் செயல்படுவதாக விமர்சித்த அவர், இத்தகைய தலைமையின் கீழ் மாநிலத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
நாகப்பட்டினத்தில்135 கிலோ மெத்தப்பட்டமைன் சுமார் 400 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழக அரசு மக்களுக்கு அளித்துள்ள பரிசு விலைவாசி உயர்வு மட்டுமே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், பட்டியலிட்டு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும், விஞ்ஞான முறைப்படி செயல்படுவதாக சன்ன ரக அரிசி வழங்குவதாக கூறினார்கள் ரேஷன் அரிசியைப் பட்டை தீட்டி ரூ.30-க்கு வழங்குவதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே நடைபெற்று வந்த சில பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும், சில பொருட்களின் விலை 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு இது என்ன கருத்து சொல்ல முடியும் சம்பந்தப்பட்டவர்களை கேட்டா தான் தெரியும் என்ன தவறு நடந்தது என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும்.
பேராசிரியர் கலையரசன் கைது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கைது நடவடிக்கை தான் செய்ய முடியும் விலைவாசியைக் குறைத்துவிட முடியுமா என்றார்.
நாளை குறிப்பதில் டி வி தினகரன் சசிகலா எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு என தகவல் குறித்த கேள்விக்கு ? தவறான தகவல் டிடிவி அவர்கள் எங்களுடன் இணைந்து தான் பணியாற்றுகிறார் நல்ல உறவுடன் இருக்கிறார் திட்டமிட்டு வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
ஒருங்கிணைந்த அதிமுக ? பத்தாண்டு காலமாக இப்படி தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் எப்போது நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற வேண்டும் 2017 இருந்து இன்றைக்கு வரைக்கும் எங்களது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி பீனிக்ஸ் பறவை போல் இயங்கும்
ஆறுகளில் நுரை ஏற்படுவதற்குச் சோப்பு மற்றும் ஷாம்பு காரணம் என அமைச்சர் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
அமைச்சருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நதிகளைத் தூய்மைப்படுத்த பிரதமருடன் இணைந்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு 2019-20 ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் தெரிவித்து இதற்காக 11 ஆயிரம் கோடிநிதி ஒதுக்கப்பட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி கொடுத்தது. 2025-ல் திமுக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை.
இதைப் பற்றி அமைச்சர்களுக்கு தெரியாது இது நாங்கள் கொண்டு வந்த திட்டம் இதை நடைமுறைப்படுத்துங்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு அரசு முயற்சி எடுத்தா தானே நடக்கும். மத்திய அரசுடன் விளக்கமாக நாங்கள் இருந்ததால்தான் கேட்ட திட்டங்கள் கொடுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியா ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றார்.
மேலும், விஜய்க்கு எப்படி ஒரு ஜாக்பாட் அடித்தது , அதேபோல் தனுஷுக்கும் ஒரு ஜாக்பாட் அடிக்கும் என நம்புகிறார்கள். அனைவருக்கும் உரிமை உண்டு
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் மக்களுக்காக என்ன திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அரசு ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி, இந்தியாவிலேயே மோசமான ஆட்சி என தெரிவித்து சென்றார்.




