• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாபெரும் பாரம்பரிய உணவுத்திருவிழா..,

ByP.Thangapandi

Oct 29, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் தெடக்கப் பள்ளியில்
பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்து அதன் பயன்கள் குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.,

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன், மட்டன், புரோட்டா, பீட்சா, பர்கர், வெரைட்டி ரைஸ், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட செயற்கை உணவுகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.,

பள்ளி குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது பெற்றோர்களும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு உணவுகளை வாங்கி தருகிறார்கள்.,

இந்த நிலையில் இயற்கை உணவுத் திருவிழாவில் 1 முதல் 5 ம் வகுப்பு பாடம் எடுக்க கூடிய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு ஏற்பாட்டில் இயற்கை உணவுகளான கம்மங்கூழ், கேப்பை கூழ், வத்தல்கள், இயற்கை காய்கறிகள், இயற்கை பழங்கள், கேப்பை புட்டு, முளைக்கட்டிய பயிர்கள், அவித்த பயிர்கள் உள்ளிட்டவைகளை தயார் செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.,

இதில் பாரம்பரிய இயற்கை உணவுகளை பள்ளி மாணவ மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்.,