புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக வருகை தந்து புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து சாலை மார்க்கமாகவே திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் முதல்வர் விஜய்யை வரவேற்க தீவிர ஏற்பாடு பல்வேறு இடங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் டிஜிட்டல் பாடர்கள் பேரிகார்டுகள் அமைத்து வருகின்றனர்.
விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ள சூழலில் பொதுமக்களை சந்திக்க ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்க்கிறார்.

ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் விழா மேடை பணிகளை பார்வையிட திருச்சி மண்டல ஐஜி வருகை ஆயுதப்படை மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பார்வையாளர்கள் கேலரி அமைக்க உள்ள இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.





