• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல

Byகுமார்

Sep 25, 2022

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது நான்கு புத்தகங்கள் மட்டுமேஎன மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள பள்ளிவாசலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது
என்ஐஏ சோதனைக்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கடந்த 22ம் தேதி சோதனை என்ற பெயரில் அத்துமீறலையும் சட்ட விதிமுறைகளையும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை வண்மையாக கண்டிக்கிறோம் .பல நபர்களை கைது செய்துள்ள நடவடிக்கை என்பது திடீர் நடவடிக்கை அத்துமீறல்.
மத்திய புலனாய்வுத்துறை இதை செய்துள்ளது.மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளோடு துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகாரிகள் 20, 25க்கும் மேற்பட்டோர் வந்து எங்களை அச்சுறுத்தினர்.
இவர்களோடு தமிழக காவல்துறையோடு கை கொடுத்துள்ளது.மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இங்கே என்ன செய்ய வந்திருக்கிறார்கள் என்பது மதுரை மாநகர ஆணையாளர் அவர்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனையான ஒன்று.பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் போலீசார் அத்துமீறியசம்பவம் வேதனையை அளிக்கிறது.இவர்களது சோதனையில் நான்கே நான்கு புத்தகங்களை மட்டுமே எடுத்துள்ளனர். ஆனால் அந்த இல்லத்தில் உள்ள அனைத்து பெண்களையும் விரட்டியதோடு மட்டுமில்லாமல் தேசத் துரோகிகள். என்று சொல்லி அச்சுறுத்தி உள்ளனர்.
அதிகாலை நேரத்தில் எங்களது தொழுகையை நிறுத்தி விட்டார்கள் பள்ளிவாசலை மூடிவிட்டார்கள்.மக்கள் தன் எழுச்சியாக போராட்டம் நடத்திய அடிப்படையில் தான் பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்த சோதனை பெண்கள் குழந்தைகள் அந்த இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது.ஒரு கர்ப்பிணி பெண்ணை விட்டு வைக்காமல் இந்த காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர்.காரணம் எங்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காவல்துறையை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்போது கைது செய்துள்ள யாரும் குற்றவாளிகள் அல்ல அப்பழுக்கட்டவர்கள்.நீதி பரிபாலனை,நீதிமன்றம் மக்களுக்காகவோ சட்டத்திற்காகவோ இல்லை என்பதை எங்களது வேதனை அளிக்கிறது.அடிப்படை உரிமைக்கு எதிராக நடக்கக்கூடிய நடவடிக்கை இது. ஆர்எஸ்எஸ் என்கிற சக்தியின் சித்தார்ந்தம் எங்களை இந்த அளவுக்கு பாடாய்படுத்துகிறது.
அப்பாவிகளாக இருக்கக்கூடிய எங்களது நண்பர்களை கைது செய்தவர்களை உறுதியாக மீட்டெடுப்போம் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் விடுதலை செய்திற வரையில் நாங்கள் எங்களது மன எழுச்சிக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம். எங்களோடு தோழமையில் இருக்கிற தமிழக அரசாங்கம். அதே சமயம் தமிழக காவல்துறையை பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை என்றார்.