• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆ.ராசாவுக்கு மிரட்டல் – கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது

Byகாயத்ரி

Sep 21, 2022

நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு கொலை மரிட்டல் விடுத்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம்ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து கோவை பிளமேடு புதூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆ.ராசா மற்றும் தி.மு.க.வினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பீளமேடு போலீசார் தாமாக முன்வந்து பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று அதிகாலை பீளமேடு போலீசார் அவரை அவினாசி ரோட்டில் உள்ள பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்தனர் .கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜக வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பஸ்மறியல் செய்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதி ஏற்பட்டது.