• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாதயாத்திரை நிறுத்தம்… டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி…

Byகாயத்ரி

Sep 21, 2022

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 1500 கிலோ மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி திடீரென காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள்(செப்.23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும், சோனியா காந்தியை சந்திக்கவும் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறுத்திவிட்டு செல்ல இருக்கிறார். நாளை மறுநாள் மட்டும் பாதயாத்திரை நிறுத்தப்படும் என்றும் அதன்பின் சனிக்கிழமை(செப்.24) கேரளாவின் சாலக்குடியில் மீண்டும் பாதயாத்திரை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.