• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

உலக மல்யுத்த போட்டியில் – வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா

ByA.Tamilselvan

Sep 19, 2022

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும். 2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.