• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

ByM.maniraj

Sep 19, 2022

நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதள் மற்றும் எல்லோ பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது.
நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் கழுகுமலையை சேர்ந்த கராத்தே டீம் பர்ஸ்ட் பேச் மாணவர்கள் – நேத்ரா ஶ்ரீரேணு பிரியா, சந்தோஷ், யோகிஸ்வர், சஹானா, லக்ஷ்மி பிரியா, ஆகியோர் ஷோபுகாய் கோஜூரியோ கராத்தே ஸ்டைலில் பயிற்சி பெற்று பெல்ட் எக்சாமில் பங்கு பெற்று, அதற்குரிய நடைமுறைகளில் தேர்ச்சி பெற்று மஞ்சள் பெல்ட் ஐ வென்று சாதனை படைத்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள கோல்டன் நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூலில் எஸ்.ஜி.கே.எஸ். இந்தியா வின் தெழில்துறை இயக்குநர் ரென்சி s. சுரேஷ் குமார் தலைமையில் சென்சாய் . செந்தில் வழி நடத்தலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றிபெற்ற கழுகுமலை அகாடமி மாணவர்கள் அனைவருக்கும் ,சான்றிதழும், எல்லோ கலர் பெல்ட்டும் வழங்கப்பட்டது, நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பாக நிர்வாகிகள் செல்வமுத்துக்குமார், மற்றும் ரோஹிணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தனர்.