• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

குலசேகரம் தசரா திருவிழா கொரோன நெறி முறைப்படி நடத்த வேண்டும்! இந்து மகாசபை ஆர்ப்பாட்டம்!…

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில், ஆந்திராவில் திருப்பதி கோவில்களில் எப்படி கொரோனா நெறி முறைகள் பின்பற்றப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ ? அதுபோன்று குலசேகரம் தசரா விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து மகாசபையினர் ஆர்ப்பாட்டம்.

அகில பாரத இந்து மகா சபை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் குலசேகரம் தசரா விழாவில் அதுவும் அரசு கோவிலில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கொரோனா காலத்தை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பிறமாநில கோவில்களில் பின்பற்றுவது போல பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது எப்படி கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலிலும் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலிலும் கொரோனா நெறிமுறைகள் படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது அது போல் தமிழக அரசும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி குலசை தசரா விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.