• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பல்லடத்தில் காவலர்கள் சந்திப்பு விழா

ByS.Navinsanjai

Sep 15, 2022

2009 ஆம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த காவலர்கள் சந்திப்பு விழா பல்லடத்தில் நடைபெற்றது…
திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியில் உள்ள 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த பெண்கள் உட்பட 200 மேற்பட்ட காவலர்கள் சந்திப்பு விழா பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட காவலர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்தும் பாட்டு பாடியும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். மேலும் பயிற்சி பள்ளியில் தன்னுடன் பயிற்சி பெற்ற நண்பர்களுடன் குழு குழுவாக செல்ஃபி எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வின் மூலம் எங்களது மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு ஏற்படுவதாக சந்திப்பில் பங்கேற்ற காவலர்கள் கூறினர்.