• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ராஷ்மிகாவுக்கே சவால் கொடுத்து சாமி.. சாமி.. பாடலுக்கு ஆடிய சிறுமி..

Byகாயத்ரி

Sep 14, 2022

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக வெளியான புஷ்பா நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற சாமி..சாமி.. பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவி வைரலானது. இந்த பாடல் வந்தபோதே பலரும் இந்த பாட்டுக்கு ஆடி ரீல்ஸ் செய்து வந்தனர். தற்போது ராஷ்மிகா போலவே சிறுமி ஒருவர் சாமி பாட்டுக்கு ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது ராஷ்மிகாவையே மிஞ்சிவிட்டார் அந்த குட்டி சிறுமி என்று தான் சொல்ல வேண்டும்.