• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ByA.Tamilselvan

Sep 13, 2022

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அனைத்து துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட அரசுத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு வந்த அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை செயலாளர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதுவரை எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவு உள்ளது, தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும் கேட்டறிந்தார். மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் துறைவாரியாக ஒவ்வொரு செயலாளர்களும் விரிவாக விளக்கம் அளித்து பேசினார்கள்.