ஜெயிலர் படம் வெளிவர உள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த். தான் ‘அரசியலுக்கு வரப்போவதில்லை’ என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அவரிடம் ஆதரவு கேட்ட கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் தரப்பிலான பதில் ஏமாற்றத்தையே தந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும் பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். .
குறிப்பாக, ரஜினிகாந்த் நடிக்கும் பட வேலை ஆரம்பிக்கும் போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். தனது படம் வெளிவரும் நேரங்களில் ரசிகர்களை சந்திப்பது ரஜினி வழக்கம். அந்த வகையில், ‘ஜெயிலர்’ பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், “வரும் ஏப்ரல் மாதத்திற்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்” என, அவருடைய அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு, ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஜெயிலர் படம் வெளிவரஉள்ளதால் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
