
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். அதன்படி அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள இந்த பாடல் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை 4:40க்கு வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் பாடலை கேட்க காத்துள்ளனர். அத்துடன் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

