• Fri. Apr 26th, 2024

வெளியானது சீதா ராமம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி..!!

Byகாயத்ரி

Sep 6, 2022

திரையரங்குகளில் வெளியான சீதாராமம் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மான், ம்ருனால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்த திரைப்படம் சீதாராமம். இந்த பணம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 80 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சீதாராமம் திரைப்படம் அமேசான் ஓடிடியில் வரும் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் வீட்டில் உட்கார்ந்து அமேசான் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள் போலவே ஓடிடி பிளாட்பார்மிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *