• Fri. May 3rd, 2024

உரிய விலை கிடைக்காத விரக்தியில் வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசிய விவசாயி..!

Byவிஷா

Sep 3, 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயி ஒருவர் 700 மூட்டை வெங்காயத்தை கிணற்றில் வீசினார்.
ஓசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், ஏழு ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட வெங்காயம் சாகுபடி செய்தார். பொதுவாக, 50 கிலோ கொண்ட இந்த வகை வெங்காயம், சந்தையில், 5,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை விலை போகிறது, ஆனால், மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக, அறுவடை முடிந்து விற்பனைக்கு எடுத்துச் சென்ற விவசாயி தெரிவித்தார். 50 கிலோ சின்ன வெங்காயத்திற்கு 750 ரூபாய் தருமாறு வியாபாரிகள் கேட்டனர். எவ்வளவோ முயற்சி செய்தும் வெங்காயத்தின் விலை உயராததால் விரக்தியடைந்த விவசாயி சீனிவாசலு தான் பயிரிட்டிருந்த 700 சின்ன வெங்காய மூட்டைகளை குளத்தில் வீசி எறிந்தார்.
இதனால், காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு ஏற்ற கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *