• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

உதயநிதி நடிக்கவுள்ள கடைசி திரைப்படம்

Byமதி

Sep 29, 2021

‘கர்ணன்’ படத்தின் வெற்றியை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் கபடியை களமாகக் கொண்டு துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, தற்போது அந்தப் படத்துக்கான பணிகளை ஆரம்பித்துளார் மாரி செல்வராஜ்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் நவம்பர், டிசம்பரில் இந்தப் படம் தொடங்கவிருப்பதாகவும், 40 நாள்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் உதயநிதி நடிக்கும் கடைசி படம் இதுதான் என்கிறார்கள். அதனால் இந்தப் படம் மிகச்சிறப்பானதாக வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி. மேலும் படத்திக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கிறார்.

மேலும், இந்தியாவின் முன்னணி நடிகருள் ஒருவரான ஃபகத் பாசில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தற்போது கமல் ஹாசனுடன் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.