• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ் உடன் பிரபல நடிகர் சந்திப்பு…

ByA.Tamilselvan

Aug 26, 2022

ஓ.பி.எஸ் பல்வேறுமாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கிராஜ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை தனிதனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓட்டலுக்கு திடீரென்று வந்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என அழைக்கப்படும் நடிகர் பாக்கியராஜ் ஓ.பி.எஸ் உடன் 1மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்து வருகிறார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது.