• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அன்னை தெரேசா பிறந்தநாள்… தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!!

Byகாயத்ரி

Aug 26, 2022

இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை அவரது சிலைக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு சமூக அமைப்பினரும் அன்னை தெரேசாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.