• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் தேர் பவனி…

ByS.Navinsanjai

Aug 22, 2022

160 ஆண்டு பழமையான பள்ளபாளையம் அருள்திரு ஆரோபன அன்னை ஆலய தேர் பவனி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருள் பெற்று சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளபாளையத்தில் அமைந்துள்ளது .160 ஆண்டுகள் பழமையான அருள்திரு ஆரோபன அன்னை ஆலயம் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா ஊரடங்கு தடை உத்தரவின் காரணமாக இத்திருக்கோயிலில் திருப்பலியோ தேர்பவனியோ நடைபெறவில்லை.

இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு தடைக்காலம் நீக்கப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து உலக நலன் வேண்டியும் தொழில் வளம் சிறக்கவும் மனிதர்களிடையே அன்பு தலைத்தோங்கவும் ஆரோபன அன்னையை வேண்டும் விதமாக இன்று திருப்பலி நிகழ்ச்சிகளும் தேர் பவணியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலியும் மாலையில் பங்குத்தந்தை குழந்தை சாமி தலைமையில் திருப்பவனியும் அதனை தொடர்ந்து ஆரோபண மாதாவின் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.இதில் ஊராட்சி தலைவர் பழனிசாமி,தேவராஜ் காட்டன் மில் தேவராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.