• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாள்.!

ByAlaguraja Palanichamy

Aug 22, 2022

தமிழ்நாட்டிலுள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா அறிவிக்கப்படுமா.? சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி, திராவிட மாடலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அண்ணல் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொண்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாள் இன்று (ஆகஸ்ட் 22 ஆம் தேதி) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்று மறைந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளான இமானுவேல் சேகரனார், நெல்கட்டும்செவ்வல் தளபதி வெண்ணி காலாடி, தளபதி சுந்தரலிங்கனார் மற்றும் வடிவு அன்னையார், கொங்கு நாட்டு சுதந்திர போராட்ட வீரர் தியாகி ராமசாமி பன்னாடி ஆகியோருக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி தமிழக அரசு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையிலும், மேலே குறிப்பிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பல்வேறு தலைவர்கள் அரும்பாடுபட்டு பல்வேறு துயரத்துக்கு ஆளாகினார்கள். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் ஆங்கிலேயர் அடக்குமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் காந்தியடிகள் அம்பேத்கார் தலைமையில் வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் போராட்டம் நடந்தது.

இதில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள நெல்கட்டும்செவ்வல் சுதந்திரப் போராட்ட தியாகி வெண்ணி காலாடி, தூத்துக்குடி மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனார் அன்னை வடிவு மற்றும் கொங்கு நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகி ராமசாமி போன்றவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு தங்கள் உயிரை துச்சமென நாட்டிற்காக கொடுத்தனர்.

இன்னுயிர் தந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக அந்தந்த ஊர்களிலே பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நினைவு சிலைகளுக்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அரசு விழா அறிவித்து மணிமண்டபம் கட்ட வேண்டும் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் அத்துடன் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அரசு சார்பில் கிராமத்தில் விழா நடத்தி தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். திராவிடம் மாடலின் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமாக தியாகிகளின் தியாகத்துக்கு மணிமகுடம் சூட்ட வேண்டும் என்று தேவேந்திர வேளாளர் சமுதாய மக்களும் மற்ற சமுதாய பொதுமக்களும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.