• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விருமன் நடன இயக்குநரை மன்னிக்கமாட்டேன் – கார்த்திக்

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. பருத்திவீரன், கொம்பன் வரிசையில் அடுத்த ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து விருமன்படத்தில் அவர் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இவருக்கு இதுவே முதல் படம்.இந்த படத்திற்கு நடன இயக்குனராக பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் இருந்தார். சாண்டி பல படங்களுக்கு கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும் பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு நடனமும் சொல்லித் தருகிறார். இவர் விருமன் படத்தில் வரும் வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கு கோரியோகிராபராக இருந்தார்.


இந்தப் பாடலில் ஒரு காட்சியில் கார்த்தி பல்டி அடித்து இருப்பார், இந்த பாடல் அதிகாலை இரண்டு மணிக்கு படமாக்கப்பட்டதால், நடுராத்திரியில் தன்னை எழுப்பி பாடாய்படுத்தியதால் சாண்டி மாஸ்டர் மீது செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இதை பாடல் வெளியீட்டின் போதே அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ள கார்த்தி, நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர் சால்ட் (பல்டி) அடிக்க விட்டாயே சாண்டி மாஸ்டர், உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று செல்லமாக திட்டி பதிவிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த கிண்டல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில் யுவன் சங்கர் ராஜாவை பாராட்டிய கார்த்தி, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு கண்டிப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.