• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்வு செய்தது செல்லாது!

Byகாயத்ரி

Aug 17, 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு மற்றும் வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், காலை 11.30 மணிக்கு தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11- ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடுந்திருந்தனர். இந்த நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.