பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ அருள்மிகு கருப்பராயன் கன்னிமார் சுவாமிகள் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு தீர்த்தம் விடுதல் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமம் ஊஞ்சபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு கருப்பராயன் சுவாமிகள் கன்னிமார் சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஏழாம் ஆண்டை முன்னிட்டு தீர்த்தம் விடுதல் மற்றும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணியளவில் கரும்பு சாட்டுதல்,வேட்டைக்குச் செல்லுதல் நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அருள்மிகு கருப்பராயன் கன்னிமார் சுவாமிகளுக்கு அலங்கார அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் பலரும் கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பூஜைகளை கோவில் பூசாரி கருப்புசாமி நடத்தி வைத்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழாவில் பல்லடம்,திருப்பூர், காங்கயம், பொங்கலூர்,அவிநாசி உள்ளூர் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.