• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்முறையாக புல்லட் ப்ரூஃப் கூண்டில் பிரதமர் மோடி

ByA.Tamilselvan

Aug 12, 2022

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக பிரதமர் மோடி புல்லட் ப்ரூஃப் கூண்டில் நின்று உரையாற்ற உள்ளார்.
வரும் திங்கட்கிழமை 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.இதில் முதன் முறையாக குண்டுதுளைக்காத கண்ணாடி க் கூண்டில் நின்று பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று தெரிகிறது. டெல்லி செங்கோட்டையில் கண்ணாடி க்கூண்டு நிறுவும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகின. 1985 முதல் இந்திய பிரதமர்கள் புல்லட் ப்ரூஃப் கூண்டில் நின்றே உரையாற்றி வந்துள்ளனர். ஆனால் இதுவரை திறந்தவெளியில் நின்று உரையாற்றி வந்த மோடி பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த ஆண்டு முதன்முறையாக கண்ணாடிக் கூண்டில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.